உள்ளூர் செய்திகள்

அம்மா குமதி! பிள்ளை சுமதி!!

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த அவளது தோழியும் பணிவிடைக்காரியுமான மந்தரை, கைகேயியிக்கு துர்போதனை செய்து அவளது மனதை மாற்றி பட்டாபிஷேகத்தை தடுத்தாள். பரதனுக்கு பட்டம் சூட்டியதோடு ராமனைக் காட்டுக்கும் அனுப்பினாள். இதற்குக் காரணம் கைகேயிக்கு இருந்த 'குமதி' தான். 'குமதி' என்றால் கோணல் புத்தி. ஆனால் கைகேயியின் மகன் பரதனோ 'சுமதி' கொண்டவனாக இருந்தான். 'சுமதி' என்றால் 'நல்ல புத்தி' என்று பொருள். நாடாள விரும்பாத அவன், ராமனின் அன்புக்கு கட்டுப்பட்டவனாக இருந்தான். தெளிந்த சிந்தனையும், நல்ல புத்தியும் கொண்டவன் பரதன் என்று வால்மீகி ராமாயணம் போற்றுகிறது. தினமும் வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சுமதி (நல்லபுத்தி) உண்டாகும்.