சுப்புலட்சுமியும் சுப்ரபாதமும்
UPDATED : நவ 14, 2025 | ADDED : நவ 14, 2025
சுப்ரபாதம் என்றாலே நினைவுக்கு வருவது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தான். இது 'கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவர்த்ததே' எனத் தொடங்கும். சுப்ரபாதத்தை இயற்றியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார். தன் இனிய குரல் வளத்தால் இதை உலகறியச் செய்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி தான். இவரின் ஆன்மிக சேவையை பாராட்டி கீழ்த்திருப்பதி பிரதான சாலையில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் திருப்பதி கோயிலிலோ, மாடவீதிகளிலோ எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதத்தை பக்தர்கள் கேட்க முடியாது. ஆகம ரீதியாக சுவாமியின் முன்னிலையில் வேத பண்டிதர்களே பாட வேண்டும் என்பது விதிமுறை. இதுவே மாடவீதிகள் உள்ளிட்ட திருப்பதி மலை எங்கும் ஒலிபரப்பாகிறது. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய விஷ்ணு சகஸ்ரநாமம் திருப்பதியில் ஒலிபரப்பப்படுகிறது.