கும்பிடுறேன் சுவாமி
UPDATED : நவ 14, 2025 | ADDED : நவ 14, 2025
'காஞ்சிபுரமும், கும்பகோணமும் கை எடுக்க விடாது' என பழமொழி உண்டு. அதாவது காஞ்சிபுரம் செல்பவர்கள் கோயிலைப் பார்த்தவுடன் கைகளை எடுத்து கும்பிடுவர். அதன் பிறகு அவர்களால் கைகளைப் பிரிக்க முடியாது. அடுத்தடுத்து கோயில்கள் வரிசையாக உள்ளதால் இந்த இரண்டு தலங்களிலும் 'கும்பிடுறேன் சுவாமி' என கைகள் கூப்பியபடியே இருக்கும். பிரிக்க முடியாது என்பது இதன் பொருள்.