நடுவில் முருகன்
UPDATED : நவ 14, 2025 | ADDED : நவ 14, 2025
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் மூன்று கோயில்கள் சிறப்பானவை. ஒருபுறம் ஏகாம்பரேஸ்வரர்(சிவன்) கோயில். மறுபுறம் காமாட்சியம்மன் கோயில் இரண்டுக்கும் நடுவில் உள்ளது முருகனின் குமரகோட்டம். சிவன், பார்வதிக்கு இடையில் முருகன் அமர்ந்திருக்கும் கோலம் 'சோமாஸ்கந்த மூர்த்தி' எனப்படும்.இந்த சோமஸ்கந்த மூர்த்தி அமைப்பிலேயே காஞ்சியில் மேற்கண்ட மூன்று கோயில்களும் அமைந்திருப்பது சிறப்பாகும்.