விரதத்தில் கடுமை ஏன்
UPDATED : நவ 14, 2025 | ADDED : நவ 14, 2025
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் எண்ணம், சொல், செயலில் துாய்மையுடன் இருப்பதே திரிகரண சுத்தி. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரண கோஷம் சொல்ல வேண்டும். துாங்குவதற்கு பாய் மட்டும் பயன்படுத்த வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதியில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடினப் பயிற்சிகள் விதிக்கப்பட்டன.