சனி தோஷமா...
UPDATED : நவ 14, 2025 | ADDED : நவ 14, 2025
மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை 'சாஸ்தா பாட்டு' என்பர். இதில் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்னும் இருவர் துணை நின்றனர். பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு பிரிவுகளாக இந்தப் பாடல்கள் உள்ளன. 'சேவம்' என்றால் 'சேவகம்' என்பது பொருள். பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர். இந்தப் பாடலை பாடினாலும், கேட்டாலும் சனிதோஷம் தீரும்.