உள்ளூர் செய்திகள்

காதுல காமாட்சி! கழுத்தில மீனாட்சி!

'கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம்; கழுத்துக்கு அணிகலன் மாங்கல்யம்' என்பார்கள். மாங்கல்யம் தாங்கும் கழுத்து மங்கலமாக திகழ வேண்டும் என்பதால் சுமங்கலிகள் நெற்றியில் இடும் குங்குமத்தை கழுத்திலும் இட்டுக் கொள்வர். கிராமப்புறங்களில் மணப்பெண்ணை வாழ்த்தும் போது, 'அவளுக்கென்ன ராஜாத்தி! காதுல காமாட்சி! கழுத்தில மீனாட்சின்னு என்னைக்கும் மகராசியா இருப்பா!' என்று சொல்வர். இங்கு காமாட்சி என்பது தோடு, மூக்குத்தி போன்ற ஆபரணங்களையும், மீனாட்சி என்பது திருமாங்கல்யத்தையும் குறிக்கும்.