உள்ளூர் செய்திகள்

கோடி மடங்கு புண்ணியம்

தினமும் காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது அவசியம். அப்போது சிறிது நேரமாவது பக்தியுடன் மந்திரம், ஸ்தோத்திரம், தேவாரம், திவ்யபிரபந்தம் போன்றவற்றை ஜபிப்பது நல்லது. இதனால் ஒரு மடங்கு புண்ணியம் உண்டாகும். இதே வழிபாட்டை நதி, குளம் போன்ற நீர் நிலைப் பகுதிகளில் செய்தால் இரு மடங்கும், பசு தொழுவத்தில் செய்தால் நூறு மடங்கு புண்ணியமும் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில் ஜபம் செய்தால் கோடி மடங்கு புண்ணியம் உண்டாகும்.