உள்ளூர் செய்திகள்

காலம்! பொன்னான காலம்!

பொங்கல் திருநாளை கேரளாவிலும், வடமாநிலங்களிலும் மகர சங்கராந்தி என்ற பெயரில் விழா கொண்டாடுகின்றனர். 'கிராந்தி' என்ற சொல்லே 'கராந்தி' ஆனது. 'கிராந்தி' என்றால் மாறுதல். 'சங்' என்றால் 'நல்ல முறையில்' என பொருள். 'நல்ல முறையிலான மாற்றம்' என்பதையே சங்கராந்தி என்கிறோம். சூரியன் மகர ராசியில் நுழையும் நாள் மனித வர்க்கத்திற்கு நல்ல மாற்றத்தை தரும். இதனால் தான் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க தைப்பொங்கல் இடுகிறோம். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை உத்திராயண புண்ணிய காலம் என்பர். சுபமுகூர்த்தங்களை நடத்த இது பொன்னான காலம் என்றால் மிகையில்லை.