உள்ளூர் செய்திகள்

ஏகாதசி கொண்டாட்டம் ஏன்?

ஒருமுறை பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்த சமயத்தில், விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு அழகு மங்கையாக உருவெடுத்தது. அசுரர்களை அழித்த அந்த சக்தி, வெற்றியுடன் வைகுண்டம் திரும்பியது. அந்த சக்தியைத் தேவர்கள் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு 'ஏகாதசி' என்று பெயர் ஏற்பட்டதாக பத்ம புராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிஷதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்ததும் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு 'கீதா ஜெயந்தி' என்றும் பெயருண்டு.