உள்ளூர் செய்திகள்

வார்த்தை விளையாட்டு

 ''ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!!என்று ஏகாதசி குறித்த ஸ்லோகம் ஒன்று இருக்கிறது.இதில் வரும் 'போஜந த்வயம்' என்பதற்கு 'இருமுறை சாப்பிடுங்கள்' என்று பொருள். ஆனால் ஏகாதசியன்று பட்டினி தான் இருக்க வேண்டும். அப்படியானால் இதன் பொருள் என்ன தெரியுமா?'போஜன' என்பதை 'போ' 'ஜன' என்று பிரித்து பொருள் சொல்ல வேண்டும். ''ஹே! ஜனங்களே!” என்பது இதன் பொருள். ''ஹே! ஜனங்களே! ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டியது இரண்டு. உபவாசமாக பட்டினியிருப்பதும், இறைவனின் பெருமைகளைக் கேட்பதுமாகும்” என்பது ஸ்லோகத்தின் பொருள்.