உள்ளூர் செய்திகள்

ஒழுக்கம் உயர்வு தரும்

* நல்ல ஒழுக்கங்கள் தவறுகளைத் தண்ணீராக கரைத்து விடுகின்றன. * தீய ஒழுக்கங்கள் மனிதனின் நற்கூலிகளைக் கெடுத்து விடுகின்றன. * சிறந்த ஒழுக்கத்திற்கு சொந்தக்காரரே இறைவனுக்கு நெருக்கமானவர். * மனிதர்களுக்கு தரப்பட்ட சிறந்த பொருள் ஒழுக்கம். * நல்லொழுக்கமும், நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் விட்டுவிட வேண்டியது வரும். * மறுமையின் மீது நம்பிக்கை கொண்டவர் நல்லதையே பேச வேண்டும். இல்லையேல் மவுனமாக இருக்கலாம். * நேரத்தை சரியாக பயன்படுத்தினால் வெற்றி உறுதி. * இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. அவை உடல் நலம், ஓய்வு நேரம் ஆகும்.-பொன்மொழிகள்