பிறரை குறை கூறாதீர்கள்
UPDATED : மார் 14, 2022 | ADDED : மார் 14, 2022
* உங்களுடைய குறைகளை போக்கிக் கொள்ளாத நிலையில், பிறரது குறை குறித்து பேசாதீர்.* பிறருக்கு உதவும்போது நீங்கள் துன்பப்பட நேரிடலாம். வருத்தப்படாதீர். அது இறைவனின் கருணைக்கு அறிகுறி. * பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றம் ஆகாது.* மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லுங்கள்.* எண்ணத்தாலும், செயலாலும் பிறருக்கு நல்லதையே செய்யுங்கள். * உண்மையைப் பேசுங்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.* உங்களின் வயது அதிகரிக்குதா... நல்லதையும் கூடுதலாக செய்யுங்கள்.* நண்பர்களிடம் உண்மையாக இருங்கள். இறைவனின் பார்வை உங்கள் மீது விழும். * ஒருவரை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவரது நண்பரை அறிந்து கொள்ளுங்கள். * எவரேனும் உங்களுடைய குறைகளை சொல்லி திட்டினால் வருத்தப் படாதீர்கள். அந்த பாவம் அவரையே சாரும். - பொன்மொழிகள்