உள்ளூர் செய்திகள்

தயக்கம் காட்டாதீர்கள்

* பெற்றோர், பெரியோரிடம் அன்பு செலுத்துவதில் தயக்கம் காட்டாதீர்கள். * நாவைக் காத்துக் கொண்டவர் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்.* நல்லதை மட்டும் பேசுங்கள். இல்லாவிடில் மவுனமாக இருங்கள். * உயிர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். உங்களுக்கு வானத்தில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்.* தொழுகை, நோன்பு, இறையச்சம் யாவும் வணக்கத்தின் உச்சமாகும். * நல்ல விஷயங்களை அதிகமாக பேசுங்கள்.* எதிர்பாராத விதமாக இரவு நேரங்களில் வந்து உதவி கேட்பவருக்கு உதவி செய்யுங்கள்.* யாரிடமும் பேசும்போது வேண்டாம், கூடாது, மாட்டேன், முடியாது என்கிற வார்த்தைகளை அதிகம் உபயோகிக்காதீர்கள்.-பொன்மொழிகள்