உள்ளூர் செய்திகள்

வந்ததும் வராததுமாக...

தோழரான அப்துல்லாஹ் பணியை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அன்று வீட்டில் உணவுக்காக ஆட்டுக்கிடா அறுக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக அப்துல்லாஹ், ''அண்டை வீட்டுக்காரருக்கு கறி கொடுத்தாச்சா'' எனக் கேட்டார். அதற்கு குடும்பத்தினர், ''அவேரா யூதர். அவருக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்'' எனக் கேட்டனர். ''யூதராக இருந்தால் என்ன? அண்டை வீட்டினர் மீது அன்பு செலுத்துவது நம் கடமை'' என்றார்.