உள்ளூர் செய்திகள்

திட்டினால்...

'தவறாக பேசிய அவனைப் பழிவாங்குவேன். என்னைப் பேச என்ன உரிமை இருக்கிறது' என சிலர் கோபப்படுவர். இதனால் மோசமான பின்விளைவு ஏற்படும். மற்றவரை திட்டினால் அந்த வார்த்தைகள் வானத்திற்குச் செல்லும். அங்கு வானத்தின் கதவுகள் மூடி இருக்கும். பின்பு அது மண்ணுலகத்திற்கு திரும்பும். இங்கும் கதவுகள் மூடி இருக்கும். பின்பு வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அலைந்து திரியும். கடைசியில் எங்கும் இடமின்றி யார் தவறாகப் பேசினாரோ அவரிடமே வந்து சேரும் என்கிறது குர்ஆன்.