உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / உண்மையும் நம்பிக்கையும் இணைந்த பயணம்

உண்மையும் நம்பிக்கையும் இணைந்த பயணம்

கடந்த 1978ல் துவங்கப்பட்ட மாயா அப்பிளையன்சஸ் பி.லிட்., 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நம்பிக்கையையும் தரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்திய குடும்பங்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2011ல் அறிமுகமான எங்கள் 'வீடியம்' (Vidiem) பிராண்டு, 14 ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பத்தையும், புத்தாக்கத்தையும், பாரம்பரியத்தையும் இணைத்து, இன்று இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையாக வளர்ந்து வருகிறது. எங்கள் பயணத்திற்கும் 'தினமலர்' ஊடக குழுமத்தின் 75 ஆண்டு பயணத்திற்கும் ஒரு அழகான ஒற்றுமை உள்ளது. நம்பிக்கை, உண்மை, மற்றும் சமூக பொறுப்பு என்பவை இரண்டு நிறுவனங்களும் தழுவிய அடிப்படைகள். துல்லியமான செய்திகள், சீரிய நோக்கு மற்றும் தமிழ்மொழிக்கான அர்ப்பணிப்பு, இதுவே தினமலரை தமிழக வாசகர்களின் இதயத்தில் நிலைநிறுத்தி உள்ளன. 'தினமலர்' தனது 75வது ஆண்டை கொண்டாடும் இந்த சிறப்பான தருணத்தில், மாயா அப்பிளையன்சஸ் பி.,லிட்., (வீடியம்) சார்பாக, இதயம் கனிந்த நன்றிகளையும், மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சித்தார்த் டி.டி. நிர்வாக இயக்குனர் மாயா அப்பிளையன்சஸ் பி.,லிட்., (வீடியம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ