| ADDED : டிச 07, 2025 05:55 AM
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் காமராஜர் சாலையோரம் ஏற்பட்டிருந்த பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர். காஞ்சிபுரம் காமராஜர் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் நுழைவாயில் சாலை வளைவு பகுதியில், கால்வாயில் சென்ற மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால், இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொட ர்ந்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை, உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், காமராஜர் சாலையோரம் ஏற்பட்டிருந்த பள்ளத்தை நேற்று சீரமைத்தனர்.