100 சதம் தேர்ச்சி!
செங்கல்பட்டு, மிஷன் உயர்நிலைப் பள்ளியில், 1976ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது நடந்த நிகழ்வு...அப்போது அதுதான், பள்ளி இறுதி வகுப்பு. தலைமை ஆசிரியர் சந்தானம் ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புகளை எடுத்தார். அவரது வழிகாட்டுதலில் சிறப்பு வகுப்புகளை நடத்தினர் பாட ஆசிரியர்கள். தனிக்கவனம் செலுத்தி, பயிற்சி கொடுத்தனர். இதன் விளைவாக இறுதி தேர்வில், அனைவரும் தேர்ச்சி பெற்றோம். நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றது பள்ளி.இதனால், மகிழ்ந்த தலைமை ஆசிரியர், 'இந்த, 76ல், தேர்வு எழுதிய, 76 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளது நிறைவு தருகிறது...' என நெகிழ்ந்து பாராட்டினார். அந்த நாள் நினைவு நீங்காமல் உள்ளது.என் வயது, 61; நல்ல பள்ளியில், நல்லாசிரியர்களிடம் கற்று தேர்ந்ததை இன்றும் எண்ணி மகிழ்கிறேன்!- வி.சி.கிருஷ்ணரத்னம், சென்னை.