உள்ளூர் செய்திகள்

பூண்டு கஞ்சி!

தேவையான பொருட்கள்:கறுப்பு உளுந்து - 250 கிராம்நாட்டுச் சர்க்கரை - 250 கிராம்பூண்டு - 100 கிராம்உலர் திராட்சை, முந்திரி - தலா 10 கிராம்நல்லெண்ணெய், ஏலக்காய் - சிறிதளவுதண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:உளுந்தை சுத்தம் செய்து, 15 நிமிடம் ஊற வைக்கவும்; பூண்டை தோல் நீக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக்கவும். பின், தேவையான தண்ணீர் ஊற்றி, ஊறிய உளுந்து, பூண்டு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும்; இந்த கலவையில் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். சுவை மிக்க, 'பூண்டு கஞ்சி' தயார். இடுப்பு வலி, வாயு கோளாறை சரி செய்யும். வாரம் ஒருமுறை சாப்பிட்டால் உடல் வலி பறந்து போகும்!- ஆர்.ஜமுனா ராணி, விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !