உள்ளூர் செய்திகள்

வேப்பம் பூ சூப்!

தேவையான பொருட்கள்:வேப்பம் பூ - 4 தேக்கரண்டிமிளகு - 2 தேக்கரண்டிதுவரம் பருப்பு வேக வைத்த நீர் - 2 டம்ளர்துவரம் பருப்பு, நாட்டு சர்க்கரை, நெய் - தலா 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2சீரகம், புளி, தண்ணீர் - சிறிதளவு.செய்முறை:வேப்பம் பூவை நெய்யில் வறுக்கவும்; புளியை நீரில் கரைத்து வடிகட்டவும். துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும். புளிக்கரைசலில் பொடித்தவற்றை போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் துவரம் பருப்பு வெந்த நீர், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். பின், வறுத்த வேப்பம் பூவை கலக்கவும். இந்த கலவையில் நெய்யில் தாளித்த சீரகத்தை போடவும்.சுவை மிக்க, 'வேப்பம்பூ சூப்' தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்; தெளிந்ததை சூப்பாக பருகலாம்; நல் ஆரோக்கியம் தரும்!- மாயா கிருஷ்ணமுரளி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !