உள்ளூர் செய்திகள்

முட்டைகோஸ் துவையல்!

தேவையான பொருட்கள்:நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்இஞ்சி - 1 துண்டுபச்சை மிளகாய் - 5சின்ன வெங்காயம் - 10புளி, தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:முட்டைகோசை சுத்தம் செய்து, வேக வைத்து, நீரை வடிகட்டவும். எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு, வேகவைத்த முட்டைகோஸ் சேர்த்து அரைக்கவும். சுவை மிக்க, 'முட்டைகோஸ் துவையல்!' தயார்.சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். சிறுவர், சிறுமியர் மிகவும் விரும்புவர்.- டி.கமலம், மதுரை.தொடர்புக்கு: 96989 70754


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !