அன்றாடம் யோகா!
உடற்பயிற்சியோ, யோகாசனமோ செய்வதை வாழ்வில் குறைத்து வருகிறோம். இதனால், உடலும், மனமும் சோர்ந்து, அதுவே எண்ணற்ற நோய் தாக்கத்திற்கு காரணமாக அமைகிறது.தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் யோகா, உடலையும், மனதையும் செம்மைப்படுத்தி, குடும்பத்தில் ஆரோக்கிய சூழலை உண்டாக்கும். அன்றாடம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்...* காலையில் இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து, பிரித்து, உள்ளங்கைகளால் கண்களை மூடவும்; பின் கண்களை நிதானமாகத் திறக்க வேண்டும்* கண்களை சுத்தமான நீரால் கழுவ வேண்டும்* பக்கவாட்டில் தேய்க்காமல், பற்களை மேலும், கீழுமாக துலக்க வேண்டும்* பல் ஈறுகளை கட்டை விரல்களால் நன்றாக அழுத்தி விட்டால் பலப்படும்* தினமும், குளியல் அவசியம்; சோப்பை சில நாள் தவிர்ப்பது சிறந்தது* காலை குளிப்பதற்கும், உணவு உண்பதற்கும் இடையே, 15 நிமிட இடைவெளி வேண்டும்.இவ்வாறு, காலையில் வழிமுறைகளை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.பசிக்கும் போது மட்டும் உண்ணுதல் வேண்டும்; வயிற்றில், உண்ணும் உணவு, 50 சதவீதம், நீர், 25 சதவீதம், வெற்றிடம், 25 சதவீதம் என்றவாறு பார்த்து கொள்ள வேண்டும். உண்ணும் போது அவசியம் ஏற்பட்டால் சிறிது நீர் அருந்தலாம்; உண்ட, 15 நிமிடத்திற்கு பின், நீர் அருந்தலாம்.நார்ச்சத்துள்ள பழங்கள், செரிமானத்தை அதிகரிக்கும். உணவோடு சேர்த்து குளிர்பானங்கள் அருந்துவது தவறு. காலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போல குறைவான அளவும் உண்ணுதல் சிறப்பு தரும்.உண்ணும் போது, பேசுவது, படிப்பது, சிந்தனை செய்வது தவறு. உணவின் ருசியும், மனதின் மகிழ்ச்சியும் கலந்து உள் இறக்க வேண்டும். வேறு சிந்தனையோடு உண்டால் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.இரவு உணவை உண்ட, ஒரு மணி நேரத்திற்குப் பின் உறங்கச் செல்ல வேண்டும். துாங்குவதற்கு முன், அன்றைய நாளில் நடந்த நல்ல விஷயங்களை மனதில் அசை போட்டு, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.* தியானம் செய்த பின், உறங்கச் சென்றால் நலன் கிடைக்கும்* தலையணையின்றி பக்கவாட்டாக படுப்பதே நல்லது* குப்புறப் படுப்பது இதயத்தையும், சுவாச பாதையையும் பாதிக்கச் செய்யும்* உறங்கச் செல்லும் முன், 'டிவி' பார்ப்பது உடலுக்கும் தீமை தரும்மகிழ்ச்சியை அதிகரிக்கவே உழைக்கிறோம்; வருமானம் ஈட்டுகிறோம். ஆனால், அதற்கேற்ப உடலோ, உள்ளமோ மகிழ்ச்சி அடைவதில்லை. உடல் திறனுக்கேற்ற எளிய யோக வழிமுறைகளை பின்பற்றுவது நன்மையும், மகிழ்ச்சியும் தரும்!