காதலனுக்கு தீவை பரிசளித்த ஏஞ்சலினா!
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, சில மாதங்களுக்கு முன், தனக்கு மார்பக புற்று நோய் இருப்பதாக கூறி, தன் மார்பகத்தை அகற்றி, பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது, மீண்டும், ஒரு பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, மற்றொரு ஹாலிவுட் பிரபலமான, பிராட் பிட்டை காதலித்து வரும் ஏஞ்சலினா, திருமணம் செய்யாமலேயே, அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். தன் ஆசை காதலனை மகிழ்விப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள, 'பெட்ரா' என, அழைக்கப்படும் குட்டித் தீவை, விலைக்கு வாங்கி, காதலனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த தீவின் விலை என்ன தெரியுமா? 121 கோடி ரூபாய். இந்த தீவை ஏஞ்சலினா பிராட்டுக்கு பரிசளிக்க காரணம், சிறிய நிலப் பரப்பிலான, இந்த குட்டித் தீவை, விமானத்தில் இருந்து பார்க்கும்போது, இதய வடிவில் இருக்குமாம். அதனால், இந்த தீவை, உடனடியாக விலைக்கு வாங்கி, காதலனுக்கு பரிசளித்து விட்டார். நடிகைகளின் காதல், ரொம்பவும் காஸ்ட்லியானது தான் போலிருக்கிறது.- ஜோல்னா பையன்.