உள்ளூர் செய்திகள்

வங்கியில் அதிகாரி பணியிடங்கள்

தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் லட்சுமி விலாஸ் வங்கி லாபகரமான செயல்பாடு, வாடிக்கையாளர் சேவையில் தனிக் கவனம் என்று செயல்பட்டு வருகிறது. இங்கு புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.வயது: 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.03.1987க்கு பின்னரும், 01.03.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் என்ற முறைகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்ச்சி இருக்கும். 150 கேள்விகளைக் கொண்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வில் நியூமெரிக்கல் எபிலிடி, அனலிடிகல் எபிலிடி, வெர்பல் எபிலிடி, பேங்கிங் அவேர்னஸ், கம்ப்யூட்டர் அண்டு ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து 150 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ. 650. ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 ஏப்., 17. விபரங்களுக்கு: www.careers.lvbank.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !