உள்ளூர் செய்திகள்

இரட்டிப்பு மகசூல் தரும் புதிய ரக சுரைக்காய்

புதிய ரக சுரைக்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் அடுத்த, திரூர் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக் கலை உதவி பேராசிரியர் முனைவர் கோ.சதிஷ் கூறியதாவது:கடந்த ஆண்டு, பாலுார் - 2 ரக சுரைக்காய் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது, பாரம்பரிய ரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட அதிக விளைச்சல் உடைய சுரைக்காய்.கொடியில் படரும் பயிரான இதன் ஆயுள், 100 நாட்கள். பயிரின், 55வது நாளில் விளைச்சல் கொடுக்க துவங்கும்.புதிய ரக சுரைக்காய், கழுத்து பகுதி குட்டையாகவும், சட்டி போன்று வடிவத்திலும் இருக்கும்.சாதாரண சுரைக்காய், 1 ஏக்கருக்கு, 8 டன் என்றால், புதிய ரகம், 16.8 டன் வரை மகசூல் கிடைக்கும். இரட்டிப்பு விளைச்சல் மற்றும் நல்ல வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 87780 78374


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !