உள்ளூர் செய்திகள்

பிரியாணி ரக அரிசிகளும் இயற்கை சாகுபடிக்கு சாத்தியம்

ரசாயன உரமின்றி, பாசுமதி மற்றும் வாசனை சீரக சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எஸ். வீரராகவன் கூறியதாவது:துாயமல்லி, சிறுமணி, ஆத்துார் கிச்சலி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பலவித பாரம்பரிய ரக நெல் ரசாயன உரமின்றி சாகுபடி செய்யலாம்.இது நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைவாக இருக்கும். அந்த வரிசையில், பிரியாணிக்கு பயன்படுத்தப்படும், வாசனை சீரக சம்பா மற்றும் பாசுமதி ரக நெல் ரகங்களை ரசாயன உரமின்றி சாகுபடி செய்துள்ளேன்.தலா, ஒரு ஏக்கர் நெல் நடவு செய்வதற்கு முன், சாண எரு அடியுரமாக போட்டு, வயலை நான்கு முறை உழவு செய்து, ஒற்றை நாற்று முறையில், நடவு செய்துள்ளேன்.நெற்பயிர் நன்றாக வளர்ந்துள்ளது. பாரம்பரிய ரக நெல்லை காட்டிலும், ஏழு மூட்டை நெல் கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !