உள்ளூர் செய்திகள்

பிச்சு பூவில் மணக்கும் வருவாய்

பிச்சி பூ சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி.பழனி கூறியதாவது:பிச்சி பூ என, அழைக்கப்படும் ஜாதி மல்லி சாகுபடியில், நல்ல வருவாய் ஈட்டலாம்.இதுபோன்ற மல்லிக்கு, ஆண்டு முழுவதும் பூ பூக்கும் தன்மை உடையது. இந்த பூவிற்கு, சந்தையில் எப்போதும் வரவேற்பு உள்ளது.உரம் மற்றும் அறுவடை மேலாண்மை முறையாக கையாண்டால், எதிர்பார்த்த வருவாய் ஈட்டலாம்.குறிப்பாக, ஒரு ஏக்கரில், ஜாதி மல்லி சாகுபடி செய்தால், செலவு போக ஆண்டிற்கு, 2 லட்ச ரூபாய் வரையில் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 96294 33748.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !