பணக்காரராக்கும் வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடு வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கம்மாளம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனைவர் சி.சுப்பையா கூறியதாவது:வெள்ளாடு வளர்ப்புக்கு சிறந்தது, ஒரு பிரசவத்தில், இரண்டு குட்டிகள் போடும் தரமான ஆடுகளை தேர்வு செய்து, வளர்ப்பது தான்.ஓர் ஆடு, ஆண்டுக்கு ஆறு குட்டிகள் வரை போடும். 500 ஆடுகள் வளர்த்தால், 3,000 குட்டிகள் இருக்கும். ஆடு விற்றால், ஓர் ஆட்டுக்கு, 4,000 முதல், 5,000 ரூபாய் வரை கிடைக்கும். ஓராண்டுக்கு செலவு போக, 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம். குறைந்த அளவில் ஆடு வளர்த்தாலும் நல்ல வருமானம் உண்டுஇவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 98843 01017