உள்ளூர் செய்திகள்

ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆதாயம்

எங்கெங்கு மேய்ச்சல் வசதிகள் இருக்கின்றதோ அவ்விடங்களில் பகலில் ஆடுகளை மேயவிட்டு மாலையில் கூடுதலான கலப்பு தீவனங்களை இட்டு வளர்க்கும் முறை ஆடுகளில் அதிக லாபம் தரக்கூடியதாகும். குடற்புழு நீக்கம் மருத்துவ முறையை ஆடு வளர்ப்பவர்கள் முறையான காலகட்டங்களில் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆடுகளை 'நடமாடும் உண்ணிகள் அருங்காட்சியகம்' என கூறுவர். ஒட்டுண்ணிகளும் பிற புற உண்ணிகளும் ஆடுகளை தாக்கி அவற்றின் சத்துக்களை உறிஞ்சி எடை கூடுவதற்கு தடையாக இருக்கும்.இனப்பெருக்க காலம்ஆடுகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் மேய்ச்சல் அவசியம். மேய்ச்சல் பற்றாக்குறையாக இருக்கும்போது கலப்பு தீவனம் தரலாம். சராசரியாக 15 கிலோ எடை வரையுள்ள ஆடுகளுக்கு 25 கிராம் கலப்பு தீவனம் தேவை. ஒவ்வொரு 5 கிலோ கூடுதல் எடைக்கும் 50 கிராம் கலப்பு தீவனத்தை அதிகரிக்க வேண்டும். குட்டி ஈனும் பருவத்துக்கு வரும் பெட்டை ஆடுகளை நன்றாக பராமரித்தால் தான் நல்ல திடகாத்திரமான குட்டிகளை ஈனும். ஆடுகளின் சினைக்காலம் 150 நாட்கள். ஆடுகள் குட்டி ஈனும் நேரம் நெருங்கும்போது, அவற்றை மற்ற ஆடுகளில் இருந்து தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும்.தடுப்பூசி அவசியம்குட்டி ஈன்றதும் ஒரு வாரம் தாயுடன் குட்டியை சேர்த்து வைக்க வேண்டும். 90 முதல் 120 நாட்களுக்கு பின் தாயிடம் இருந்து குட்டிகளை நிரந்தரமாக பிரித்து விட வேண்டும். மூன்று மாத வயதுக்கு பின் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் துள்ளுமாரி, ஆட்டுக்கொல்லி போன்ற நோய்களுக்கு தொற்று தடுப்பூசி போடுவது நல்லது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்துகளை மருத்துவரின் கண்காணிப்பின் பேரில் வழங்க வேண்டும். ஆடுகளின் ஆரோக்கியத்திற்கும், கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்கவும், உடல் எடை கூடுவதற்கும், அதிக வருமானம் பெற ஏற்றவாறு குடற்புழு நீக்க மருந்துகளை ஆண்டுக்கு நான்கு முறை கொடுத்து வர வேண்டும். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !