உள்ளூர் செய்திகள்

கோழிக்கு ரத்த கழிச்சல் நோய் தடுக்க யோசனை

ரத்தக்கழிச்சல் நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை பேராசிரியர் அ.கோபி கூறியதாவது:வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. இதுபோன்ற காலங்களில், நாட்டுக் கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு, கோழி வளர்ப்பு பெரிதும் சவாலாக இருக்கும்.'ஐமீரியா' என்னும் ஓரணு ஒட்டுண்ணிகளால், ரத்தக் கழிச்சல் நோய் வரும். இந்நோய் தாக்கிய கோழிகளுக்கு, ரத்தம் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சல் இருக்கும்.பாதிக்கப்பட்ட கோழிகள் தீவனம் உட்கொள்ளாது; எப்போதும் சோர்வாக காணப்படும். எச்சத்தின் வழியாக பல கோழிகளுக்கு நோய் பரவி, கோழிகள் இறக்கவும் நேரிடும். இதனால், கோழி வளர்ப்பில் பெரிய நஷ்டம் ஏற்படும். இதை தடுக்க, சல்பாடிமிடின், ஆம்புரோலியம் போன்ற மருந்துகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தடுப்பு மருந்துகள் கொடுக்கலாம். பண்ணை கொட்டகையை அதிக ஈரப்பதம் இன்றி, சுண்ணாம்பு துாள் கொட்டி லேசான ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 044 - 2726 4019


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !