உள்ளூர் செய்திகள்

கருவண்டு எனும் மண்ணின் காவலன்

சாண வண்டுகள் என்பவை கருவண்டுகள். இவை மண்ணை வளப்படுத்தும் உயிரினங்களில் மிகவும் முக்கியமானது. விலங்குகளின் கழிவுகளை உருட்டி கொண்டு சென்று மண்ணுக்குள் புதைத்து துப்புரவு தொழிலையும் செய்கிறது. இந்த வண்டுகளின் 8,600 வகையினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சாண வண்டுகள் பகலில் தன்னுடைய பணியை செய்து விட்டு இரவில் மண்ணுக்குள் புதைந்து விடும் தன்மை கொண்டது.கால்நடை கழிவுகள், இதர கழிவுகளை மறு சுழற்சி செய்து மண் வளத்தை பேணி காக்கிறது. ஒரு நாளிற்கு சாண வண்டுகள் தன்னை விட 250 மடங்கு கழிவுகளை மண்ணுக்குள் அனுப்புகின்றன. கனமான எடையை சுமந்து செல்லும் திறன் இதற்கு உண்டு. சூரிய வெளிச்சம், நிலவின் ஒளியை கொண்டு தனது பணியை செய்யும் திறன் பெற்றவை. இந்த வண்டுகள் மண்மை வளமாக்கி விவசாயத்திற்கு பயனுள்ள வழியை ஏற்படுத்துகிறது.- எஸ்.சந்திரசேகரன்வேளாண் ஆலோசகர்அருப்புக்கோட்டை94435 70289


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !