மண் வளம் அறிந்து உரமிடல் அவசியம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். வேளாண் விளை பொருள் மகசூல் அதிகரிக்க விவசாயிகள் மண் வளம் அறிந்து உரமிடுவது அவசியம். செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழை, மணி, சாம்பல், கால்சியம், மாங்கனீஸ், இரும்பு, போரான், மாலிப்டீனம், நிக்கல் உள்ளிட்ட சத்துக்கள் செடிகளுக்கு வளமான மண்ணில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. ரசாயன உரங்களை தவிர்க்கவும், சுற்றச்சூழலை காக்கவும் மண் வள பரிசோதனை செய்வது சிறந்தது. மண்ணில் கிடைக்கும் சத்துக்களை மண் வள அட்டையை கொண்டு நன்கு அறிந்து அதற்கேற்ப தேவையான அளவு, இயற்கை மற்றும் செயற்கை உரங்களை மண்ணில் இட்டு அதிக மகசூல் பெற முடியும். மண் வள அட்டை மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.- செல்வி ரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர்வேளாண் அறிவியல் நிலையம், மதுரை.0452-242 2955