மண் புழு வளர்ப்போம் மண் வளம் பெறுவோம்
புவியில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மண்புழுக்கள் வாழ்கின்றன. விவசாயிகளுக்கு மண்புழுக்கள் பல்வேறு நன்மைகளை மறைமுகமாக செய்கின்றன. அங்கக கழிவுகளை மக்க வைத்து உரமாக்கி, பயிர்களுக்கு சத்தாக கொடுக்கிறது. மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, நோய் கிருமிகளை அழிக்கின்றன. எனவே மண்புழுக்களை சுற்றுப்புறச்சூழ்நிலை அமைப்பாளர்கள் எனலாம்.மண்புழு கழிவு மண் வளத்தை அதிகரிக்க செய்கிறது. மண்புழுவில் அங்ககக்கரி, தழை, மணி, சாம்பல் சத்து, மக்னீசியம், கந்தகம், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரச்சத்து அதிகமாக உள்ளது. ஐந்து மடங்கு தழைச்சத்து, 7 மடங்கு சாம்பல்சத்து மற்றும் ஒன்றரை மடங்கு சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.மண்புழு தேர்வுமண்புழுக்கள் அங்கக கழிவுகளில் அதிகம் வளரும் தன்மை உடையவை. எல்லாச் சூழ்நிலையிலும் வளர்வது, அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் ரகமாக இருக்க வேண்டும். அதிக உணவை உட்கொண்டு செரித்து வெளியேற்றும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.மண்புழு வகைகளில் ஆப்ரிக்கன் மண்புழு தான் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இப் புழு அதிக எண்ணிக்கையில் வளர்ந்து அதிகமான கழிவுகளை உட்கொண்டு, குறைந்த காலத்தில் செரித்து உரமாக மாறுகிறது. வேளாண் பயிர் கழிவுகள், காய்கறி கழிவுகள், களைச்செடிகள், கால்நடைக்கழிவுகள், உணவு பதப்படுத்தும் ஆலை கழிவுகள், சமையல் எண்ணெய் ஆலை கழிவுகள், தென்னை நார் ஆலையின் கழிவுகள், விதை பதப்படுத்தும் ஆலையின் கழிவுகள், வேளாண் தொழிற்சாலை ஆலை கழிவுகள் இதற்கு தேவை.உற்பத்திக்கான இடம்நிழலுடன் அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியான இடம் வேண்டும். பயன்படுத்தப்படாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை, கட்டடங்களை பயன்படுத்தலாம். மழை, குளிர், வெயிலில் இருந்து பாதுகாக்க தென்னை ஓலை கூரையை பயன்படுத்தலாம். தயாரிப்பு கட்டமைப்பானது 2 அடி உயரம், 3 அடி அகலம் மற்றும் நீளம் எந்த அளவாகவும் இருக்கலாம். மண்புழு உரத்தொட்டி சிமென்டால் கட்ட வேண்டும். அடிப்பகுதி சாய்வாக இருக்க வேண்டும். தற்போது குறைந்த செலவில் சில்பாலின் முறையில் மண்புழு உரப்பைகள் கிடைக்கின்றன. இதைக்கொண்டும் தயாரிக்கலாம்.உற்பத்தி படுக்கைநெல்உமி, தென்னைநார் கழிவு, கரும்பு தோகையை தொட்டியின் அடிப்பகுதியில் 3 செ.மீ. உயரம் வரை இடவும். இதன்மேல் 2 செ.மீ., வரை ஆற்று மணல் நிரப்பவும். அதன்பின் 3 செ.மீ., உயரம் தோட்டத்து மண்ணால் பரப்ப வேண்டும். இதன்மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.மக்க விடுதல்மக்கக் கூடிய கழிவுகளை சேகரித்து அதில் உள்ள இரும்பு, பீங்கான், கண்ணாடி பொருட்களை பிரித்து நீக்குதல் வேண்டும். மக்கும் கழிவுகளை 20 நாட்கள் குவித்து, அதில் சாண கரைசலை தெளிக்கவும். இப்போது கழிவுகள் புழுக்கள் சாப்பிட ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை மற்றும் சாண எரிவாயு கழிவுகள் உரம் தயாரிக்க உகந்தது. தொடர்புக்கு: 86083 15942முனைவர் மு. திருநாவுக்கரசு முனைவர் சு.செந்தில்குமார் மண்ணியல் துறை காந்தி கிராமிய பல்கலை.