நவீன தொழில்நுட்பம்
இறைச்சி மற்றும் முட்டைக்கோழிகளின் உடல்சோர்வை நிவர்த்தி செய்தல்சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்: கோழியைப் பிடித்து கையாளுதல், கோழியை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், திடீரென்று ஏற்படும் வெப்பநிலை மாற்றம், தடுப்பூசி, தீனியின் தரம், பூஞ்சைக்காளான் தீனியில் வளர்வதால் அதிக நெருக்கடி, மூக்கு வெட்டுதல் ஆகியவைகளாகும். கீழ்வரும் காரணிகளைச் சரிசெய்தால் வெப்ப அயற்சியைத் தடுக்கலாம்.அமிலக்காரச் சமன்பாட்டை ஒரே சீராக வைத்தல்: வெப்ப அயற்சியின் காரணமாக அதிக மூச்சுவிடுவதால் கார்பன்டை ஆக்சைடு அதிகமாக வெளியேறி அதனால் அமிலக்காரச் சமன்பாடு மாறுபடுகிறது. அம்மோனியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு, சோடியம் பை கார்பனேட் மற்றும் சோடியம் சிட்ரேட் போன்றவற்றை தீனியிலோ, வேறு வகையிலோ தேவைக்கேற்ப சேர்ப்பதால் வெப்ப அயற்சியின் தாக்கத்தை நிவர்த்தி செய்யலாம்.தண்ணீர் பராமரித்தல்: வெப்பத்தைக் குறைக்கும் வெவ்வேறு வகையான உப்பை தண்ணீரில் சேர்த்து கொடுப்பதால் தண்ணீரை அதிகமாக குடித்து தண்ணீரின் அளவை உடலில் சமச்சீராக வைத்துக்கொள்கிறது. வெப்ப அயற்சி நேரத்தில் பொட்டாசியம் குளோரைடை தண்ணீரில் கலந்து கொடுப்பதால் அதன் உற்பத்தி உயர்வது மட்டுமல்லாமல் சீரம் புலால் நீரிலுள்ள கார்டிகோஸ்டீரான் அளவைக் குறைத்து கோழியின் உடலிலுள்ள தண்ணீரின் அளவை ஒரே சீராக வைத்து உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்கிறது. தண்ணீரில் பொட்டாசியம் குளோரைடை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் தீனி உட்கொள்ளும் அளவு அதிகமாகி உடல் வளர்ச்சி அதிகமாகிறது. மேலும் உடல் வெப்பநிலையைவிட தண்ணீரின் வெப்பநிலையை குறைத்துவிடுகிறது.குடிதண்ணீரின் வெப்பநிலை குறையும்பொழுது முட்டைக்கோழிகளின் தீனி உட்கொள்ளும் அளவு, முட்டை ஓட்டின் தடிமன், முட்டை எடை, முட்டை உற்பத்தி அதிகமாகிறது. கறிக்கோழியின் முடி உதிர்வை தடுத்து நிறுத்துகிறது.ஊட்டச்சத்தை பராமரித்தல்: ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்பொழுது முட்டைக்கோழிகளில் 1.5 சதம் தீனி உட்கொள்ளும் அளவு குறைகிறது. (21 - 32 டிகிரி செ. வரை) தீனி உட்கொள்ளும் அளவு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. வெப்பநிலை உயரும்போது எரிசக்தி அளவு குறைவாக தேவைப்படுகிறது. ஆகையால் உடலை ஒரே சீராக வைக்க வெப்பமான காலங்களில் கறிக்கோழிகளுக்கு அதிக எரிசக்தி கலவை வெப்பமான இடங்களில் பயன்படுத்த வேண்டும். வெப்பமான காலங்களில் அஸ்கார்பிக் அமிலத்தை 200 மி.கி/ கிலோ என்ற அளவில் தீனியில் சேர்த்து கொடுக்கும்பொழுது வெப்பத்தை எதிர்த்து அதனால் ஏற்படும் இறப்பைக் குறைக்கிறது. முட்டைக் கோழிகளுக்கு இக்காலங்களில் வைட்டமின் சியைக் கொடுக்கும் பொழுது முட்டை எடை, முட்டை ஓட்டின் தடிமன் மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் முக்கியத்துவம்: வெப்ப அயற்சி காலங்களில் கால்சியமானது மற்ற தாது உப்புக்களைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் சுற்றுப்புற வெப்பநிலையால் முட்டை எடை மற்றும் முட்டை ஓட்டின் தடிமன் குறைகிறது. வெப்பமான காலங்களில் முட்டையின் தரத்தை உயர்த்த கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.* தீனியில் சோடியம் பை கார்பனேட்டைச் சேர்க்கலாம்.* சிப்பி அல்லது மற்ற கால்சியம் சத்து கொடுக்கக்கூடியவற்றைத் தனியாக உபயோகித்தால் நல்ல பயனாக இருக்கும்.* இரவு நேரக் குளிர்ச்சி நல்ல பலனைக் கொடுக்கும்.* சோடாத் தண்ணீரைக் கொடுத்தால் நல்ல பயனாக இருக்கும்.* அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப் பதத்தினால் முட்டை எடை, முட்டை ஓட்டின் எடை மற்றும் முட்டை ஓட்டின் மூலப்பொருட்களைக் குறைக்கிறது. அதிக வெப்பமான காலங்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் விகிதம் மிக மிக முக்கியம். அதிக பாஸ்பரசினால் முட்டை ஓட்டின் தரம், முட்டை ஓட்டின் தடிமன், முட்டை எடை போன்றவை வெப்பமான காலங்களில் குறைகிறது. (தகவல்: ச.மால்மருகன், ஜே.ஜான்சன் ராஜேஷ்வர், நுண்ணுயிரியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்