வெள்ளாட்டு கிடாக்களுக்கு தீவனமாகும் மல்பெரி இலை
மல்பெரி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது: பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். வயலை சுற்றிலும் வரப்பு பயிராக மல்பெரி சாகுபடி செய்து வருகிறேன். இந்த மல்பெரி இலைகள், நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. மேலும், வெள்ளாடுகளுக்கு மல்பெரி இலைகளை தீவனமாக வழங்கலாம். குறிப்பாக, கிடா ஆடுகளுக்கு தினசரி, 1 கிலோ மல்பெரி இலைகளை தீவனமாக வழங்கலாம். இதன் மூலமாக, கிடா ஆடுகளுக்கு கொழுப்புச் சத்து அதிகரித்து, நன்றாக எடை கூடும். பெண் ஆடுகளுக்கு மறந்தும் மல்பெரி இலைகளை தீவனமாக வழங்கக்கூடாது. காரணம், பெண் ஆடுகளுக்கு அதிக கொழுப்பு சத்து கிடைத்துவிட்டால், சினை பிடிக்கும் தன்மை குறைய வாய்ப்புள்ளது. எனவே, வெள்ளாட்டு கிடாக்களுக்கு சிறந்த தீவனமாக, மல்பெரி இலைகளை கொடுத்து வளர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.