உள்ளூர் செய்திகள்

நாட்டுக்கோழிகளுக்கான ஊட்டச்சத்து அட்டவணை

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவனத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கம்பு, அரிசி குருணை, சோளம் போன்ற தானியங்களை சிறு அளவில் மட்டுமே வழங்குகிறார்கள். பகல் நேரத்தில் அவை வெளியில் சென்று மேயும் பொழுது, அங்கு கிடைக்கும் புழு, பூச்சிகளையும் காய்கறி, கீரை கழிவுகளையும் மட்டுமே அவை சாப்பிடுகின்றன. இதனால் நாட்டுக்கோழிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைப்பதில்லை. வணிக ரீதியில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு மேய்ச்சலுடன் அனைத்து ஊட்டசத்துக்களும் கொடுத்து வளர்த்தால் அவற்றின் உற்பத்தி திறன் கூடுகிறது. அசோலா போன்ற தாவர வகை பசுந்தீவனங்களில் கால்சியம் சத்து நிறைய உள்ளது. இது முட்டையிடும் கோழிகளுக்கு மிகவும் ஏற்றது. கோழியின் வயதுக்கு ஏற்ப, குஞ்சுப்பருவம், வளரும் பருவம், முட்டை கோழித்தீவனம் என பருவங்களுக்கு ஏற்றவாறு ஊட்டசத்துகளை சற்று வித்தியாசம் செய்து கொடுக்கும் போது நாட்டுக்கோழிகள் நல்ல பலனை கொடுக்கின்றன.குஞ்சு பருவத்தில் ஒரு குஞ்சுக்கு 10 முதல் 30 கிராம், வளரும் கோழிப்பருவத்தில் 40 முதல் 60 கிராம், முட்டைக்கோழிகளுக்கு 90 முதல் 110 கிராம் என்ற அளவில் தீவனம் தேவைப்படும். தொடர்புக்கு 94864 69044- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !