உள்ளூர் செய்திகள்

மதுரையில் நெல் சாகுபடி துவங்கியது

பொதுவாக மதுரையில் மழையில்லாத சமயம் மேற்கண்ட தலைப்பு விவசாயிகளுக்கு சிறிது ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். இதில் ஆச்சர்யம் இல்லை. உண்மைதான். பெரியார் டேம் நிறைந்து உபரி நீர் இருந்தது. நீர் வைகை டேமிற்கு விவசாயத்திற்காக மாற்றப்பட்டது. உடனே மதுரை பகுதியில் விவசாயம் தொடங்கியது. பயிர்கள் செழிப்பாக மாற்றப்பட்டது. உடனே மதுரை பகுதியில் விவசாயம் தொடங்கியது. பயிர்கள் செழிப்பாக களையெடுத்தும் கட்டத்திற்கு வந்துள்ளது. விவசாயத்தில் நீண்டகால அனுபவத்தைக் கொண்ட எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகளை துரிதமாக விவசாயிகள் வளரும் பயிரை நன்கு கவனிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி வருகிறார். அதாவது களையெடுப்பது, பயிரில் பாதுகாப்பு அனுசரித்தல், பயிருக்கு ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது போன்றவைகள் மிக முக்கியமானது என்கிறார். இக்கருத்துக்களை ஆராயலாம்.பயிர் பாதுகாப்பு: வயலில் வளர்ந்து வரும் பயிர்களுக்கு பாதுகாப்பு செய்ய வேண்டும். இதில் சுருட்டுப்புழு, அந்துப்பூச்சிகளின் இறக்கைகள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறம் கொண்டது. இப்பூச்சி தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றிவிடும். இதைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 36 இசி 400 மில்லி/ஏக்கர் அல்லது குளோர்பைரிபாஸ் 200 மில்லி/ஏக்கர் இசி, 500 மில்லி ஏக்கர் வீதம் தெளிக்கலாம். நெல் பயிரை குருத்துப்பூச்சி தாக்கினால் ஏற்கனவே கூறியபடி மானோகுரோட்டோபாஸ் அடிக்கலாம். புகையான் பூச்சி பழுப்பு நிறமானது. பூச்சிகள் தூர்களின் அடிப்பகுதியில் நீர்ப்பரப்பிற்கு சற்று மேலாக அமர்ந்து சாற்றை உறிஞ்சும். பால் பிடிக்கும் முன்பே பயிர் கீழே சாய்ந்து கதிர்களை பதராக்கிவிடும். வயலில் தண்ணீரை வடித்துவிட்டு தூர்களின் அடிப்பாகங்களில் நன்கு படும்படி பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும். பயிருக்கு தெம்பு கொடுக்க சிறிது யூரியா இடலாம். ஆனால் அதிக அளவு அடிக்கக்கூடாது. பயிர் பூக்கும் தருணத்தில் நாவாய்ப்பூச்சி தாக்கும். இதைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதத்தூள் ஏக்கருக்கு 10 கிலோ தூவ வேண்டும். தெளிந்து வரும் பயிருக்கு வேளாண் பல்கலைக் கழகத்தின் சிபாரிசினை கேட்டு அதன்படி அசோலா உரத்தை இடலாம். இதற்கு விவசாய இலாகா கூட உதவுகின்றது. இவர்களது உதவியினைப்பெற விவசாயிகள் அணுக வேண்டும். அசோலா போல் பாஸ்போ பாக்டீரியா கூட உபயோகிக்கலாம். விவசாயிகள் இலாகா செய்யும் உதவிகளை உதாசீனம் செய்யக்கூடாது. மேலும் விவசாயிகள் வரிசை நடவு போடவேண்டும். இதில் கோனோவீடரை பயன்படுத்த வேண்டும். இதனால் களைச்செடிகள் மாண்டுவிடும். இது நல்ல பசுந்தாள் உரமாகிவிடுகின்றது. ஒரு சில விவசாயிகள் தங்கள் விருப்பப்படி தங்களுக்குத் தெரிந்த வண்டல், ரசாயன உரங்கள் இவைகளை இடுகின்றனர். இதனால் அதிக மகசூல் ஒன்றும் கிடைக்கவில்லை. வேளாண் பல்கலைக்கழகம், விவசாய இலாகா போன்றவர்களிடமிருந்து உதவி அடைந்தவர்கள் இரண்டாம்பயிருக் காக ஆடுதுறை39 நெல்லுக்கு நாற்றும் விட்டுவிட்டனர். குளிர்காலத்தில் கடுமையாக தாக்கக்கூடிய பூஞ்சாள நோய் தற்போது பயிருக்கு வராது.இதுவரை மதுரையில் நெல் சாகுபடியே செய்ய இயலாத விவசாயிகள் தற்போதுள்ள சுமூக நிலையை பயன்படுத்தி அதிக மகசூலினையும், கணிசமான லாபத்தினையும் எடுக்க வேண்டும்.-எஸ்.எஸ்.நாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !