உள்ளூர் செய்திகள்

நம்மூரிலும் மிளகு பயிரிடலாம்

மிளகு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகும் மிளகு செடிகளை நம்மூரில், சாகுபடி செய்துள்ளேன்.தென்னை, பாக்கு ஆகிய உயரமான மரங்களில் ஊடுபயிராக மிளகு பயிரிடலாம். ஒரு செடிக்கு, 10 கிலோ மிளகு பழங்கள் வரையில், மகசூல் கிடைக்கும்.அதை உலர்த்திய பிறகு, 3 கிலோ மிளகு கிடைக்கும் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். அதை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை.எனக்கு சொந்தமான மாந்தோட்டத்தில், மிளகு செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன். மிளகு கொடி நன்றாக வளர்ந்து, மாஞ்செடிகள் மீது படர்ந்துள்ளன.ஒரு ஆண்டில், மிளகு அறுவடைக்கு வரும் என, எதிர்பார்க்கிறேன். முழுமையான மகசூல் கிடைத்த பின்தான்; வருவாய் குறித்து தெரிய வரும். இருப்பினும், நம்மூர் மண்ணுக்கு, மிளகு சாகுபடி ஏற்புடையதாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !