உழவு மழை
'ஆட்டுக்கல்' என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அக்காலத்தில் அதுதான் 'மழைமானி'. பெரும்பாலும் அக்காலத்தில் வீடுகளின் முற்றத்தில் பெரிய ஆட்டுக்கல் இருக்கும். முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்து கொள்ளலாம். மழைபொழிவின் பழைய கணக்கு முறை 'செவி' அல்லது 'பதினு' எனப்படும். இது 10 மில்லி மீட்டர் அல்லது 1 சென்டி மீட்டருக்கு சமமானது.மழையின் அளவுக்கு நிலத்தின் ஈரப்பதத்திற்கும் தொடர்பு உண்டு. இதனை 'பதினை' என்றனர். பொதுவாக கிராமங்களில் 5 செ.மீ., அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் ஓர் உழவு மழை என்று சொல்வதுண்டு. பூமியில் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் இறங்கியிருந்தால் அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓரடி அளவிற்கு தண்ணீர் இறங்கியிருக்கும். மழையின் பெய்திறன் அடிப்படையில் கீழ்கண்டவாறு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.மழையை பற்றி திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 'மாறாநீர்' என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றும் போது எவ்வளவு நீர் இருந்ததோ அதிலிருந்து ஒரு துளி நீர் கூடவோ, குறையவோ இல்லை எனக் கூறியிருக்கிறார்.நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல் பதாகும் அறிவு.எனவே, வள்ளுவர் மாறாநீர் எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.துாறல் - பசும்புல் மட்டும் நனைவது விரைவில் உலர்ந்து விடும். சாரல் - தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். மழை - ஓடையில் நீர் பெருக்கு இருக்கும். பெருமழை - நீர் நிலைகள் நிரம்பும். அடைமழை - ஐப்பசியில் பெய்யும். விடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும். கனமழை - கார்த்திகையில் பெய்யும். கண்மாய், கால்வாய்களில் உடைப்பு ஏற்படும் அளவுக்கு பெய்யும். கோடை மழை - மாசி, பங்குனியில் பெய்யும். இடி, மின்னலுடன் பெய்யும்.இதையே அறிவியலில் 0.5 மி.மீ.,க்கு குறைவாக இருந்தால் துாறல். அதிகமாக இருந்தால் மழை. 4-6 மி.மீ.,க்கு அதிகமானால் அது கனமழை என கூறுகிறது.- எஸ்.சந்திரசேகரன்வேளாண் ஆலோசகர்அருப்புக்கோட்டை94435 70289