கறவை மாடு வளர்ப்பில் நுண் சத்துக்களின் பங்கு
கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்களின் மூலம் அவற்றிற்கு தேவையான பல்வேறு தாது உப்புகள் கிடைக்கின்றன. நிலத்தில் உள்ள தாது உப்பு களை மரம், செடி, கொடிகள் உள்வாங்கி அவற்றின் இலை, தழை மற்றும் தானியங்களில் சேர்க்கின்றன. இவையே மனிதன் உட்பட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் தீவனத்தின் மூலம் கிடைக்கின்றது.சோடியம் குளோரைடு (உப்பு)இது சாதாரண உப்பு ஆகும். இது கறவை மாடுகளுக்கு மிகவும் தேவை. கறவை மாடுகளின் தீவனம் உப்பு சேர்க்காமல் நிறைவடைவதில்லை. தினமும் மாட்டிற்கு 20 முதல் 30 கிராம் உப்பு தேவைப்படுகிறது. கறவை மாடுகளுக்கு தீவனம் தயாரிப்பவர்கள் தீவனத்துடன் ஒரு சதவீத அளவில் உப்பை சேர்க்கிறார்கள். கொட்டகையில் மாடுகள் கட்டியிருக்கும் போது ஒரு மாடு மற்றொரு மாட்டை நக்கிக் கொண்டே இருந்தால், அது உப்புப் பற்றாக்குறையை உணர்த்துகிறது. தொடர்ந்து நீண்ட காலம் உப்புப் பற்றாக்குறை நீடித்தால் பால் உற்பத்தி குறைவு, கருத்தரியாமை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.கால்சியம், பாஸ்பரஸ் சத்துஉப்புக்கு அடுத்தபடியாக கறவை மாடுகளின் தீவனத்தில் அதிகம் சேர்க்கப்படும் தாது உப்பு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகும். பொதுவாக கறவை மாடுகள் அதிக பால் கொடுக்கும் சூழ்நிலையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவு 2:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தீவனத்திலும் இதே விகிதத்தில் இந்த தாது உப்புகள் சேர்க்கப்பட வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்ப்பட்டால், அது கன்றுகளின் வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமின்றி பால் உற்பத்தியையும் குறைத்து விடுகிறது. பாஸ்பரஸ் பற்றாக்குறை ஏற்படும்போது மாடுகள் கருத்தரிக்காமல் போவதுடன், பைகா எனப்படும் நோயும் ஏற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள், எலும்பு மற்றும் மண் போன்ற பொருட்களை உண்ணத் தொடங்கும்.ஏனைய தாது உப்புகள் தேவைபொதுவாக கறவை மாடுகளுக்கு 40 தாது உப்புகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவில் தேவைப்படும், இந்த தாது உப்புகளை பல்வேறு கால்நடை தீவனங்கள் இயற்கையாகவே அளித்துவிடும். எனினும் இவற்றில் 15 தாது உப்புகள் குறைவால் கறவை மாடுகள் பாதிக்கப்படும் என்பதை கால்நடை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், குளோரின் போன்ற தாது உப்புகள் அதிகமாகவும், துத்தநாகம், இரும்பு, செலினியம், மாங்கனீசு, கோபால்ட் போன்ற தாது உப்புகள் குறைவாகவும் தேவைப்படும்.வைட்டமின்களின் பங்குமனிதர்களுக்கு தேவையான வைட்டமின்கள் அனைத்தும் கறவை மாடுகளுக்கு தேவை இல்லை. அதாவது கறவை மாட்டின் தீவனத்தில் சேர்த்து கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அனைத்து நுண் உயிர்சத்துக்களும் கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனத்தில் உள்ளது. எனவே வைட்டமின்களுக்கென்று கறவை மாடு வளர்ப்போர் வீண் செலவு செய்ய தேவையில்லை. ஆனால் பசுந்தீவனம் இல்லாத சமயத்தில் அல்லது கோடை காலத்தில் கறவை பசுக்களுக்கு வைட்டமின் 'ஏ' மட்டும் தீவனத்தில் சேர்த்து கொடுக்க வேண்டும்.காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்சத்தியமங்கலம்.