உள்ளூர் செய்திகள்

நெல் சாகுபடியில் ஆரம்பகட்ட பிரச்னைகளைத் தீர்க்க ரோட்டாவேட்டர்

நெல் சாகுபடியில் நெல் நாற்றுகளை நடுவதற்கு நிலத்தைப் பக்குவமான முறையில் கொண்டு வருவதற்கு விவசாயிகள் ஆசைப்படுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் இந்த வேலையை முடிக்கி றோமோ அந்த அளவிற்கு நடவுப்பணிகளை முடிக்கலாம். நெல் நாற்றுக்களை துரிதமாக நட இயலாமைக்கு பல பிரச்னைகள் காரணமாக உள்ளன. நம்முடைய வேளாண்மை பெரும்பாலும் பருவத்தையே நம்பி உள்ளது. ஆகவே தண்ணீர் இருக்கும்போது இப் பணியினை முடித்தால்தான் காலத்தே அறுவடையை முடித்து இரண்டாவது பயிரை செய்ய முடியும். இல்லாவிட்டால் இரண்டாவது பயிரையும் செய்ய முடியாமல் முதல் பயிரின் அறுவடையும் மழையில் அகப்பட்டு மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும். விவசாயிகள் மாடுகளை உபயோகிக்க இயலாத சூழ்நிலையில் டிராக்டரால் இயக்கும் ரோட்டாவேட்டர் கருவியை உபயோகிக்கின்றனர்.ரோட்டாவேட்டர் கருவி என்ன உதவி செய்கிறது என்ற கேள்வி எழக்கூடும். ஒரு ஏக்கர் நிலத்தை மாடுகளைக் கொண்டு உழுது சேறாக்க வேண்டுமென்றால் சுமார் ரூ.2,010/- செலவாகும்.ஒரு சால் ஓட்ட (இரு பக்கமும்) ரூ. 640.00இரண்டாவது சால் ஓட்ட ரூ. 640.00கடைசி உழவு ஓட்டி பரம்படிக்க ரூ. 730.00மொத்தம் ரூ. 2,010.00இந்த செலவு (இன்னும் கூடுதலானாலும் ஆகலாம்) செய்தும் சேறு கலக்கும்போது மண் நன்றாக சேறு ஆவதில்லை. களிமண்பாங்கான நிலத்தை சேறு கலக்கி நடவிற்கு கொண்டுவர ஏக்கருக்கு 15 நாட்கள் ஆகிவிடுகின்றது. முதல் உழவு ஓட்டியதும் நிலத்தில் உள்ள பசுந்தாள் உரம் மக்குவதற்கு ஒரு வாரம் ஆகிறது. பின் இரண்டாவது உழவு ஓட்டி எஞ்சியுள்ள பசுந்தாள் உரச்செடிகளை முழுமையாக மக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் சேறு பழுத்து வயலில் நடவு செய்வது எளிதாக இருக்கும். இப்பணிகளுக்கு செலவு சுமார் ரூ.2,000/- ஆகும். (கூடுதலாகவும் ஆகலாம்). டிராக்டர் கருவி உபயோகிப்பதால் பணியை 8 நாட்களில் முடித்துவிடலாம்.கருவியைக் கொண்டு சேறு கலக்கி நிலம் பண்படுத்துவதை நேரில் பார்த்த விவசாயிகள் தங்களுடைய நிலத்தையும் வாடகைக்கு ரோட்டாவேட்டரை பயன்படுத்த ஆசைப்படுகிறார்கள். இந்த கருவியை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. கருவியை உபயோகிக்கும்போது விவசாயிகள் உழவுக்கருவி, களையெடுக்கும் கருவி, சமப்படுத்தும் கருவி இவைகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கருவிகள் செய்யும் அனைத்து வேலைகளையும் ரோட்டாவேட்டர் கருவி ஒன்றே செய்யும்.-எஸ்.எஸ்.நாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !