சின்னச்சின்ன செய்திகள்
பரண்மேல் ஆடு வளர்ப்பு: வெள்ளாடு வளர்ப்பு குறைந்த இடவசதியில் அதிக லாபம் தருவதால் இன்று வெள்ளாடு வளர்ப்பு பெரிய தொழிலாக வளர்ந்துவருகிறது. தற்பொழுது வெள்ளாடு வளர்க்க படித்த இளைஞர்களும் பெண்களும் விரும்புவதால் அவர்கள் ஆடுகளை வெளியே கொண்டுசென்று மேய்க்காமல் தேவையான தீவன புற்களை உற்பத்தி செய்து வெள்ளாடுகளுக்கு கொடுத்து கொட்டகையில் வளர்க்கலாம்.இனங்கள்: தலைச்சேரி ஆடுகள் (மலபாரி ஆடுகள்), ஜமுனாபாரி, போயர் ஆகியவைசிறப்புகள்: அதிகமான அளவில் குட்டிகளை ஈனும். ஒரு ஈற்றில் 2 (அ) 3 (அ) 4 குட்டிகள் ஈனும். இரண்டு வருடத்தில் 3 குட்டிகள் ஈனும். வெள்ளாடு இறைச்சியில் கொழுப்பு படிவம் இல்லை. எனவே வயதானவர்களும் இதனை உண்ணலாம். சளி மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் திறன் இப்பாலின் நெய்க்கு உண்டு.கொட்டகை அமைத்தல்: மேட்டுப்பாங்கான, உறுதியான தரைப்பகுதி, நல்ல வடிகால், காற்றோட்ட வசதி, வெளிச்சம் இருக்க வேண்டும். ஒரு ஆட்டிற்கு 10 முதல் 15 அடி அளவிற்கு இடவசதி தேவை. கொட்டகையினை நீளவாக்கில் கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். அகலம் 20 அடி வரையிலும், உயரம் நடுப்பகுதியில் 9-12 அடியிலும், சரிவான பக்கப்பகுதி 6-9 அடி உயரத்திலும் கொட்டகையின் கூரை அஸ்பெஸ்டாஸ், ஓடு மற்றும் கீற்று கொண்டு அமைக்கலாம்.கொட்டகை கல் அல்லது இரும்புத்தூண் கொண்டு அமைக்கும்போது சுற்றுச்சுவர் தேவையில்லை. சங்கிலி வலை உயரம் 5-6 அடி வரை இருக்க வேண்டும். ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் விடுவதற்கு ஏதுவாக தரைப்பகுதி மரச்சட்டங்களால் ஆனதாகவும் இரு பலகைக்கு இடையே இடைவெளி 2 செ.மீ.?இருக்குமாறு அமைக்க வேண்டும். ஒவ்வொரு பலகையின் அகலம் 5 செ.மீ. இருக்க வேண்டும்.கிடாக்களை அடைக்க தனி தடுப்புகளும் குட்டி ஆடுகள், தாய் மற்றும் இளவருட ஆடுகளை அடைக்க தனி தடுப்புகள் தேவை. கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.இம்முறையில் வளர்க்கப்படும் கலப்பின ஆடுகள் 110 முதல் 150 கிராம் வரை உடல் எடை நாளொன்றுக்கு அதிகரிக்கிறது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் வளர்க்க முடியும் (தகவல்: மருத்துவர் கி.செந்தில்குமார், மருத்துவர் துரை.திருநாவுக்கரசு, மருத்துவர் வெ.விக்கிரம சக்கரவர்த்தி, பா.மோகன், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-2).டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.