உள்ளூர் செய்திகள்

சிறப்பு பயிற்சி

காடை வளர்ப்புகாஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, காடை மற்றும் வாத்து வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 044 2726 4019ஊறுகாய் தயாரிப்புபொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், தோட்டக்கலை பயிர் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து, நாளை மற்றும் நாளை மறு தினம், இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதே பயிற்சி நிலையத்தில், வரும், 19, 20ம் தேதிகளில், ஊறுகாய் தயாரிப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !