சிறப்பு பயிற்சி
மண் வளம் குறித்து பயிற்சிசெங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர், 25, 26ம் தேதிகளில், நிலக்கடலை மற்றும் எள் பயிருக்கு மண் வளம் குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371நாட்டுக்கோழி வளர்ப்புகாஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.தொடர்புக்கு: 044 - 2726 4019கறவை மாடு வளர்ப்புதிருவள்ளூர் மாவட்டம், திரூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், லாபம் தரும் கறவை மாடு வளர்ப்பு குறித்து, நாளை, கட்டணப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம். இதற்கு முன் பதிவு செய்யலாம்.தொடர்புக்கு: 94424 85691