அனைத்து காலத்திற்கும் ஏற்றது நட்சத்திர மல்லிகை
அனைத்து காலங்களிலும், வருவாய் தரும் நட்சத்திர மல்லிகை சாகுபடி குறித்து, திருவள்ளூர் அடுத்த, திரூர் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவி பேராசியர் முனைவர் கோ.சதிஷ் கூறியதாவது:காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மல்லிகை, கனகாம்பரம்பூக்கள் வகைகளை, விவசாயிகள், அதிகமாக சாகுபடி செய்கின்றனர். இப்பூக்களில், அறுவடை செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.மேலும், மழை மற்றும் பனிக்காலங்களில், மல்லிகை சாகுபடியில் வருவாய் கிடைக்காது. அதை தவிர்க்க, நடப்பாண்டு முதல், நட்சத்திர மல்லி கோ - 1 ரக மல்லி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதை, அனைத்துமல்லிகை சாகுபடி செய்யும்நிலங்களில், சாகுபடிசெய்யலாம்.இந்த நட்சத்திர ரக மல்லி, ஆண்டு முழுவதும் பூ பூக்கும் தன்மை உடையது. நீண்ட மலர் காம்பு இருப்பதால், அறுவடை எளிதாக செய்யலாம்.ஒரு ஏக்கருக்கு, 3 டன் வரை மகசூல் பெறலாம். கிலோ பூ, 150 ரூபாய் என வைத்தாலும், செலவினங்கள் போக ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருவாய் உண்டு. நட்சத்திர மல்லியை பயிரிட முறையான பயிற்சி பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 87780 78374