மஞ்சளில் இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்த அறிவுரை
மஞ்சள் சாகுபடியில், இலைப்புள்ளி நோய் தடுப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது: மஞ்சள் சாகுபடியில், இலைப்புள்ளி நோய் தாக்கம் ஏற்படும். இது, குளிர்ந்த காற்று, அதிக தண்ணீர், ஈர மஞ்சள் விதை கிழங்கு மூலமாக பரவும். நோய் தாக்கிய மஞ்சள் செடியின் இலை கருகி விடும். மஞ்சள் கிழங்கு விளையாமல் செடி இறந்து போகும். இதை தவிர்க்க, தரமான மஞ்சள் விதை கிழங்கு நடவு செய்ய வேண்டும். செடிக்கு நல்ல காற்றோட்டம் இருக்கும்படி, மஞ்சள் கிழங்கை காப்பர் சல்பேட்டில் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். தொழில்நுட்ப அலுவலரின் பரிந்துரைப்படி கரைசலை தெளிக்கலாம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவோர், டிரைகோ டெர்மா விரிடி, அசோஸ் பைரில்லம், சூடோமோனாஸ் ஆகிய உயிர் உரங்களை பயன்படுத்தலாம். இவ்வாறு கூறினார். தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355.