உள்ளூர் செய்திகள்

களைகள் பற்றி கவலை கொள்வது அறியாமை

விவசாயிகள் பலரின் மனதில் களைகள் பற்றிய தேவையற்ற அச்சம் உள்ளது. தனது தோட்டத்தில் இயற்கையாக வரும் தாவரங்கள் தான் களைகள் என்று எண்ணுவது அறியாமை. நிர்வாக முறைகளில் தனது நிலத்திற்கு சத்து சேர்ப்பதாக நினைத்து கொண்டு 'தொழு உரம்' என்ற பெயரில் அரைகுறையாக மட்கிய சாணத்தையும், கழிவுகளையும் நிலத்திற்கு பிற இடங்களில் இருந்து நாமே கொண்டு வந்து இடும்போது கிலோக்கணக்கில் களை விதைகளையும் விதைப்பது பலருக்கும் தெரியவில்லை.அதுமட்டுமல்லாமல் தரம் குறைந்த விதைகள் மூலமும் நிறைய நீரை (ஆற்றுப் பாசனமாக) பாய்ச்சும்போதும் பல விதைகள் இடம் மாறுவதுண்டு. நிலத்துக்கு குளத்து வண்டல் அடிப்பதாக நினைத்து கொண்டு 'பொறுக்கு' எனும் களிமண் மற்றும் உப்புகள், களை விதைகள், கிருமிகள் கலந்த கலவையை அள்ளி வந்து கொட்டும் போதும், கோழி எரு என்ற பெயரில் கலப்படமான தீவனங்கள் (பல தான்யம் கலந்த மட்டமான களை விதைகள் கலந்தவை) உட்கொண்ட கோழிக் கழிவுகளை மட்க வைக்காமல் இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கு கிடைப்பதாலோ அள்ளி அள்ளி கொட்டுவதாலும் களைகள் பெருகிவிடும்.எல்லாவற்றிற்கும் மேலாக நுண்ணீர் பாசனம் அமைப்புகள் மூலம் 'டேப்' எனும் முறையில் நீரை விரைவாக செலுத்தும் எண்ணத்தில் நிறைய நீரை தோட்டத்தில் நிறுத்தினால் தான் பயிர் செழித்து வளரும், என நினைத்து பாய்ச்சுவதும், எங்கேயோ இருந்து ஆற்று நீரை முறையாக அமைக்காத வரப்புகள், களைகள் நிறைந்த பகுதிகளின் மூலம் திறந்த நிலையில் சீரமைக்காத ஓடைகளில் விழுந்த விதைகள் மூலம் பறவைக்கழிவுகள், மாடுகள் ஆங்காங்கே சாணம் இடும்போதும், புல் அறுப்பவர்கள் ஆங்காங்கே விட்டுச்செல்லும் போதும் களைகள் நடப்படுகின்றன. களைகளை கண்டதும் கட்டாயம் களைக்கொல்லியை எடுக்காமல் முறையான அளவான நீர் பாய்ச்சுவதும், கோடை உழவு மூலம் களைகள் அழித்திட கருவிகள் பயன்படுத்தி மடக்கி ஓட்டுவதும், குறைந்த செலவில் நிலப்போர்வை பயன்படுத்துவதும் கோரை, அருகு போன்ற களைகள் பெருகாது தடுக்க பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, பயிர் இடைவெளியில் முழுப்பயிர் சாகுபடி, மண்புழு உரம் இடல் நல்லது.- டாக்டர்.பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர் தேனி.98420 07125


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !