வீட்டிலும் அமைக்கலாம் திராட்சை தோட்டம்
வீட்டு பந்தலிலும், பன்னீர் ரக திராட்சை சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த, 'வெல்டர்' ஆர்.குமார் கூறியதாவது:நான், 20 அடி நீளம், 20 அடி அகலம், 4 அடி சதுரத்தில், நான்கு பன்னீர் ரக திராட்சை செடிகளை நட்டுள்ளேன். கொடிக்கு கம்பி பந்தல் அமைத்து, கொடிகளை முறையாக படர விட்டுள்ளேன்.மழைக்காலம் மற்றும் குளிர் காலம் என, இரு காலங்களிலும், பன்னீர் ரக திராட்சை, கொத்து கொத்தாக காய்த்து குலுங்குகிறது. ஆண்டுக்கு, 20 கிலோ மகசூல் பெறுகிறேன். சிறிய அளவிலே, குறிப்பிட்ட வருமானம் பார்க்கிறேன். களி மண்ணை தவிர, அனைத்து வித மண்ணிலும், திராட்சை தோட்டம் அமைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 63810 84262