உள்ளூர் செய்திகள்

நீரா பானம் நீங்களே தயாரிக்கலாம்

நீரா பானம் பதநீர் - கள்ளுக்கு இடைப்பட்ட பானம். இது பருகியதும் புத்துணர்வு தரும் ஆல்கஹால் இல்லாத இயற்கை உற்சாக பானம். நீர் என்பது தென்னை மரத்தின் இளம் பூவில் இருந்து கிடைக்கும் இனிப்பு பானம். நீரா பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது.நீரா உற்பத்தி தென்னைகுட்டை, நெட்டை தென்னையில் அதிக நீரா உற்பத்தியாகும். ஆண்டுக்கு 12-14 பாளை உற்பத்தி செய்யும். ஒர பாளையில் 1.5 - 3 லிட்டர் சாறு நாள் ஒன்றுக்கு கிடைக்கும். ஒரு பாளையில் 35 -45 நாள் வரை நீரா சாறு கிடைக்கும். மரம் ஒன்றுக்கு 6 மாதத்திற்கு 400-600 லிட்டர் சாறு கிடைக்கும். மரத்தின் பாரம்பரியம், பருவ கால மாற்றம், சாறு எடுப்பவர் திறமையை பொருத்தது.நீரா உரிமம் பெறும் முறைபதிவு செய்த தென்னை உழவர் உற்பத்தியாளர், தென்னை வளர்ச்சி வாரியம் பதிவு பெற்ற கூட்டுறவு சங்க நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும். நீரா உரிமம் பெற உணவு தரக்கட்டுப்பாடு சான்று அவசியம். உரிமம் பெற மொத்த தென்னை மரங்களில் தென்னை உற்பத்தியாளர் கம்பெனிகளில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சொத்தமாக 5 சதவீதம் அல்லது 40,000 மரங்கள் இதில் எது குறைவோ அது இருக்க வேண்டும்.நீரா உரிமம் பெற உதவி கலால் கமிஷனர் மாவட்ட ஆய்வு அதிகாரியாக உள்ளார். நீரா உற்பத்திக்கு தென்னை விவசாயிகள் சங்கம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின் தான் உற்பத்தி செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் நீரா உற்பத்தி செய்ய கூடாது.வருமானம் தரும் நீரா பானம்ஐஸ் பாக்ஸ், எதிர் நொதித்தல் முறை என இரண்டு விதமாக நீரா தயாரிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை 552 தென்னை உற்பத்தி சங்கங்கள், 66 தென்னை உற்பத்தி கூட்டமைப்பு உள்ளன. தனி நபர்கள் நீரா பானம் இறக்க அனுமதி கிடையாது. எனவே, இதை தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு மூலம் தான் இறக்கி விற்பனை செய்ய முடியும். தென்னை விவசாயிகளுக்கு நல்ல தரும் பானம் தான் நீரா பானம்.- எஸ்.சந்திரசேகரன்வேளாண் ஆலோசகர்அருப்புக்கோட்டை.94435 70289


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !